தமிழினத்துரோகி யார்?

தமிழகத்தில் இலங்கை பிரச்சனையையும், ராஜிவ்காந்தி கொலை வழக்கையும் வைத்துகொண்டு பலபேர் அரசியல் வியாபாரிகளாய் திரிகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை…இதில் முக்கியமானவர்கள் சீமான், நெடுமாறன் மற்றும் பலர்…..இவர்களை அரசியல் வியாபாரிகளாய் சித்தரிக்க வேண்டுமென்பது எண்ணமில்லை ஆனால் இவர்களின் செயல்பாடு, மற்றும் இன்றைய நிலை அப்படி யோசிக்க வைக்கிறது….

இவர்களின் இன்றைய நிலை தி.மு.க வை எதிர்ப்பது மட்டும் தான் அதைதாண்டி இவர்கள் இன்னும் எதையும் செய்து விடவில்லை அப்படி இருக்கையில் இவர்கள் எப்படி தங்களை தமிழ்தேசியவாதிகலாக அடையாளம் காட்டிகொள்கிறார்கள்??????

விடுதலைபுலிகள் விவகாரத்தில் தி.மு.க வின் நிலை ஆரம்பத்திலிருந்து இன்றுவரை ஒரே நிலையில் இருக்கிறது என்பது உண்மை…ஆனால் LTTE விவகாரத்தில் நாளுக்கொரு நிலை எடுத்த ஜெயலலிதாவை இவர்கள் எப்படி ஆதரித்தார்கள் ???? பிரபாகரனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும், போர் என்றால் அப்பாவி மக்கள் இறப்பது இயல்பு என்று மன்னிக்க முடியாத வார்த்தைகளை எல்லாம் மறந்தது எப்படி???

வைகோ,நெடுமாறன் போன்றவர்களை என்ன காரணதிற்காக பொடா சட்டத்தில் ஜெயலலிதா கைது செய்தார் என்பது நாடறிந்த உண்மை…தமிழ்நாட்டில் LTTE பற்றி பேசுவதே தவறென்றும், பேசுபவர்களை எல்லாம் சிறையில் அடைத்த ஜெயலலிதாவை இவர்கள் ஈழத்தாய் என்கிறார்கள்….இதற்க்கான காரணம் என்னவாக இருக்கும்????? தி.மு.க எதிர்ப்பு என்பது மட்டும்தான்….

அரசியலே தெரியாத சில இளைஞர்கள்,
ஈழ அரசியலை மனதில் வைத்து, தலைவர் கலைஞர் அவர்கள் மீது வன்மத்தை, அள்ளித் தெளிப்பது என்பது அந்த இளைஞர்களின் தலைவர் சரியில்லை என்பதற்கான சான்றாகவே எடுத்துக் கொள்ள முடியும். அதிலும்,
நான் உயிராக மதிக்கும் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இந்நேரம் இருந்திருந்தால் மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு சுட்டுத் தள்ளியிருப்பார்.
தலைவர் கலைஞர் அவர்கள், தான் மட்டும் ஜொலிப்பது என்பதல்லாமல்,
அமைச்சரவைச் சகாக்களும் ஜொலித்தால்தான் மக்களுக்குச் செல்ல வேண்டிய பலன்கள் சரியாகச் சமமாகச் செல்லும் என நம்பியவர் .
ஆனால்
திரு.சீமான் போன்றவர்கள், தான் மட்டுமே ஜொலிக்க வேண்டும் என்கிற சுயநலம் உள்ளவர் .அதனால் தான், அவரை நம்பிய இளைஞர்களை வரலாற்றை அறியாமலேயே வைத்திருந்து, சமூகத்தில் அனைவரும் காரி உமிழும் வண்ணம் அசிங்கப்பட வைத்திருக்கிறது .
முதலில் எந்த நேரத்தில், எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்றைய இளைஞர்கள் அதுவும் நாம் தமிழர் கட்சியினராக இருக்கிறார்கள் என்றால் அது யார் குற்றம்?
திரு.சீமான் வீட்டில் ஒரு சாவு என்றால், பக்கத்து வீட்டில் மேள தாளத்துடன் சுப நிகழ்ச்சி நடத்தி பிரியாணி விருந்து வைத்தால் எப்படி இருக்கும்?
திமுகவில் பெரும்பாலானோர் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.
தமிழகத்தில் உள்ள ஒரு பெரிய அரசியல் கட்சி, இங்குள்ள அரசியலையும் மனதில் கொண்டுதான் காய் நகர்த்துவார்கள் .
சிறு சிறு அரசியல் கட்சிகள் உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதைப் போல திமுக பேசிவிட முடியாது. அப்படிப் பேசும் அரசியல் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது. அப்படி ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லாத நாம் தமிழர் போன்ற கட்சிகளின் பேச்சை நம்பிய இளைஞர்கள் இன்று நடுத்தெருவில். அறிவார்ந்த பெருமக்கள் விலகிச் சென்றுவிட்ட சூழலில், மிச்சம் இருக்கும் இளைஞர்களைத் தக்கவைக்க
தவறான தகவல்களை, தவறான வரலாறுகளை, ஆதாரமில்லாக் குற்றச்சாட்டுகளை, தொண்டை கிழியப் பேசித் தக்க வைத்து , தமிழகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறது திரு.சீமானின் நாம் தமிழர் இயக்கம்.

கடந்த 9 வருடங்களாக பொய்யான பிரச்சாரம் மூலம் இந்த தமிழ் தேசிய அயோக்கியர்கள் உண்மையான எதிரி ராஜபக்க்ஷேவை மக்கள் மத்தியில் மறக்கடித்து விட்டனர். சீமான் இதில் இந்திய ஏஜெண்ட் ஆக கச்சிதமாக செயல் பட்டுள்ளார்.

ஈழ இறுதி போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மடிந்ததற்கு காரணம் யார்?நேர்மையாக பதில் கூறிட திராணியுள்ளவர்கள் உண்டோ?

ஈழ இறுதி போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் பழியான இடம் முள்ளிவாய்க்கால் அச் சிறிய பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாக கொண்டுவந்து அடைக்கப்பட்டது ஏன்?ஏன்?ஏன்?போர் முனையில் சிறிய குண்டு வீச்சு நடைபெற்றாலே பச்சிளம் குழந்தைகள் முதல் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சாக நேரிடும் என்பதை கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியது யார்?இலங்கை ராணுவம் என்றுமே நெருங்க முடியாத இடமான புலிகள் தலைநகர் கிளிநொச்சியே வீழ்ந்தவுடன் எஞ்சியவர்கள் தீரத்துடன் போரிட்டு மடிந்திருக்க வேண்டும்.ஆனால் புலிகள் அதனை செய்திடாமல் ஈவு ஈரக்கமற்ற முறையில் முள்ளிவாய்க்காலில் மக்களை அடைத்து அவர்களை மனித கேடயமாக பயன்படுத்தியது ஏன்?பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்தவுடன் தங்களது ஆயுதங்கள் மவுனிக்கின்றன என எல்லாம் முடிந்தவுடன் கூறி என்ன பலன்?புலிகளை வீழ்த்த இதுவே கடைசி வாய்ப்பு என ஈவு ஈரக்கமற்ற முறையில் குண்டுகளை வீசி தம் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தது யார்?எரிக்சன் தலைமையிலான நார்வே நாட்டு சாமாதான தூதுக்குழு ஏற்படுத்தி மிக நல்ல தீர்வுகளை எல்லாம் வீணடித்து வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு போர் முனைக்கு சென்றது யார்?போரினை நிறுத்திட வலியுறுத்தி லண்டன் பாராளுமன்றத்தின் முன் 1 லட்சம் தமிழர்கள் கூடி வேண்டுகோள் விடுத்தும்.ஏன் ஐ நா மன்றத்திற்கே சென்று தமிழர்கள் வேண்டுகோள் விடுத்தும். ஐ நா மன்றமும் உலக நாடுகளும் கண்டும் காணாது போல் இருந்தது ஏன்? எதனால்?இவை எல்லாவற்றிக்கும் மேலாக போர் உச்சகட்டத்தில் நடைபெற்ற போது தமிகத்தில் மக்கள் கண்டும் காணாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தது ஏன்?ஏன்?அன்று ஒவ்வொரு தமிழனும் வீதிக்கு வந்து போராடி நாட்டினை ஸ்தம்பிக்க செய்திருக்க வேண்டாமா?ஏன் செய்திடவில்லை?மேலும் அன்று போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள் என தமிழர்கள் கொல்லப்பட்டதை கொச்சை படுத்திய ஜெ அவர்களை மீண்டும் தமிழக முதல்வராக மக்கள் தேர்தெடுத்தது ஏன்?சுமார் 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு வரும் கட்சியின் தலைவரை இந்திய மண்ணிலேயே படுகொலை செய்துவிட்டு அவர்களிடமே போரை நிறுத்த உதவிடு என்றால்?

இத்தகைய கேள்விகளுக்கு எல்லாம் உண்மையான நேர்மையான,நியாயமான
விடையை தேடிவிட்டு பிறகு வாருங்கள் ஓர் மாநில முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் மீது குற்றம் சுமத்த என்று சில அரைவேக்காடுகளிடமும்,வஞ்சகமாக பழிபோடும் வஞ்சகர்களிடமும் கேட்க வேண்டிய கேள்விகளாக உள்ளது.நான் இப்படி ஒரு பதிவு போட்டு பதில் சொல்ல சீமான் தும்பிகள் ஒருவனுக்கும் இதுவரை துப்பில்லை.

thamizhina throgi